சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் மின்னணு கற்றல் மேலாண்மை முறையை (e-LMS) போட்டித் தேர்வு மாணவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது.
*e-LMS* _Electronic learning management system_ for competitive examination students. https://elms.annacentenarylibrary.org சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் மின்னணு கற்றல் மேலாண்மை முறையை (e-LMS) போட்டித் தேர்வு மாணவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் UPSC , TNPSC, TNUSRB, TRB, SSC, RRB, Banking போன்ற தேர்வுகளில் கடந்த 30 ஆண்டுகளில் கேட்கப்பட்ட 31000 மேற்பட்ட கேள்விகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான விடைகளும் விளக்கங்களும் ஆதார நூல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. இது மட்டும் இல்லாமல் படிப்பதற்கான பாடத் தொகுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த வினாக்கள் அனைத்தும் 21 பாடங்களில் 293 நுண் தலைப்புகளில் (Micro topics) வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடத்தில் உடனடியாக பயிற்சி செய்யும் விதமாக Study mode, Practice mode, Mock test ஆகிய மூன்று விதங்களில் இந்த வினாக்களை பயிற்சி செய்து தங்களது தேர்வு தயாரிப்பை மேம்படுத்திக் கொள்ளலாம். Practice mode, Mock test ஆகியவற்றில் பிறர் போட்டித் தேர்வு மாணவர்...