தினம் இரு திருக்குறள்-10(பெரியாரைத் துணைக்கோடல்)

 

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்(45)
(நன்னெறியில் செலுத்தும் பேரறிவு உடையோரை துணைக் கொள்ளுதல்)

குறள்: 3
அரியவற்றுள் எல்லாம் அரிதே ,பெரியாரைப் பேணித் தமராக் கொளல்
 

பொருள்:

  • பெரியோரைப் போற்றி அவரை தமது உறவாக்கிக் கொள்ளுதல்
  •  அரியவற்றுள் எல்லாம் அரிய செயலாகும்
அருஞ்சொற்பொருள்:
  1.    பேணி-போற்றி
  2.   தமர்-உறவினர்
குறள்: 4

  தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை

பொருள்:

  •    தம்மைக் காட்டிலும் அறிவில் சிறந்த பெரியவரே தமது உறவாக ஏற்றுக்கொள்வது
  • எல்லாவற்றையும் விட சிறந்த வலிமை ஆகும்
அருஞ்சொற்பொருள்:
  1. வன்மை -வலிமை
  2. தலை -சிறப்பு
  3. ஒழுகுதல்- ஏற்று நடத்தல்

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE