தினம் இரு திருக்குறள் -6

 

பால்: பொருட்பால்

இயல்: அமைச்சியல்

அதிகாரம்: வினைத்திட்பம் (67)


குறள்: 5

 வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம்                                                                              -  வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும்
 

பொருள்:

  •      தனது செயலால் பெருமை பெற்று உயர்ந்த வரின்  திறமை
  •  நாட்டை ஆளும் மன்னரிடத்தே எட்டி நன்கு மதிக்கப்படும்
அருஞ்சொற்பொருள்:
  1.     வீறு-சிறப்பு
  2.   எய்தி- பெற்று
  3.  மாண்டார்-மாட்சிமைப்பட்ட அமைச்சர்
  4. உள்ளப் படும் - நன்கு மதிக்கப்படும்
  5. ஊறு எய்தி - நல்ல வினையை எய்துவித்தல்

குறள்: 6
எண்ணிய எண்ணியாங்கு எய்துப                                                                                      - எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்
  

பொருள்:
  •     ஒரு பொருளை அடைய எண்ணியவர் அதற்குரிய செயல் தகுதி உடையவராக இருந்தால்  அந்தப் பொருளை எண்ணியபடியே அடைவர்


அருஞ்சொற்பொருள்:
  1.     எய்துப-அடைவர்
  2.    திண்ணியர் -வலியர்

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE