தினம் இரு திருக்குறள்-9(பெரியாரைத் துணைக்கோடல்)

 

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்(45)
(நன்னெறியில் செலுத்தும் பேரறிவு உடையோரை துணைக் கொள்ளுதல்)

குறள்: 1
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்
 

பொருள்:

  • அற நெறியை அறிந்து அறிவில் தெளிந்து முதிர்ச்சி உடையோரது    நட்பினை
  • ஆராய்ந்து அறிந்து ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்
அருஞ்சொற்பொருள்:
  1.    மூத்த -முதிர்ந்த 
  2. கேண்மை-நட்பு
  3. தேர்ந்து-ஆராய்ந்து
குறள்: 2

  உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார் பேணிக் கொளல்

பொருள்:

  •    தமக்கு வந்த துன்பத்தை நீக்குபவராகவும்
  • மேலும் துன்பம் வராதபடி முன்னறிந்து காப்பவராகவும்
  • மேற்கண்ட தன்மை உடையவர்களை பேணி துணையாக்கிக் கொள்ள வேண்டும்
அருஞ்சொற்பொருள்:
  1. நோய்-துன்பம்
  2. உறாஅமை-துன்பம் வராமல்
  3. பெற்றியார்-பெருமை உடையவர்  

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE