தினம் இரு திருக்குறள்-8

 

பால்: பொருட்பால்

இயல்: அமைச்சியல்

அதிகாரம்: வினைத்திட்பம் (67)


குறள்: 9
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை
 

பொருள்:

  •     முடிவில் இன்பம் தரத்தக்க ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் மிகுதியாக வருமாயினும் 
  • அத்துன்பம் நோக்கி உள்ளம் தளராது துணிவு மேற்கொண்டு செய்து முடித்தல் வேண்டும்.
அருஞ்சொற்பொருள்:
  1.     உறவரினும்-மிகுதியாக வருமாயினும்
  2.     துணிவாற்றி-துணிவை நெறியாகக் கொண்டு
குறள்: 10

  எனைத்திட்பம் எய்தியக் கண்ணும்                                                                             - வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு 


பொருள்:

  •    செய்யும் செயலில் உறுதி கொள்ளாதவரை அவரிடத்தில் எந்த வகையான திறமைகள் இருந்தாலும் உலகத்தார் மதிக்க மாட்டார். 
அருஞ்சொற்பொருள்:
  1.     வேண்டாரை-இல்லாதவரை

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE