தினம் இரு திருக்குறள்-7
பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: வினைத்திட்பம் (67)
குறள்: 7
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து
பொருள்:
- உருண்டோடும் பெரிய தேரை காப்பது அதன் சிறிய அச்சாணியை ஆகும்
- அதுபோல ஒருவரை அவரின் உருவத்தைக் கண்டு இகழ்தல் கூடாது
அருஞ்சொற்பொருள்:
- எள்ளாமை-இகழாதிருத்தல்
குறள்: 8
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல்
பொருள்:
- மனம் கலங்காது செய்வதாக துணிந்து விட்ட செயலை தளர்ச்சி இல்லாது காலம் நீடிக்காதுசெய்தல் வேண்டும்
அருஞ்சொற்பொருள்:
- கலங்காது-மனம் தெளிந்து
- துளங்காது-சோம்பல் இன்றி
- தூக்கம்- நீட்டித்து
- கடிந்து -ஒழிந்து
Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது