தினம் இரு திருக்குறள்-24(வலியறிதல்)
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: வலியறிதல்
( பகை வெல்லுதலில் வலிமையை அறிந்து கொள்ளுதல்)
குறள்: 1 வினைவலியும் தன்வலியும் மாற்றான் -வலியுந்
துணைவலியுந் தூக்கிச் செயல்
பொருள்:
- தான் செய்யக் கருதிய செயலின் வலிமை,
- தன்னுடைய வலிமை, பகைவருடைய வலிமை, மற்றும் இரு சாராருக்கும் துணையாக வருவோரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தே அச்செயலில் ஈடுபட வேண்டும்.
அருஞ்சொற்பொருள்
குறள்: 2
ஒல்வ தறிவது அறிந்ததன் - கண்தங்கிச்
- தூக்கி - சீர்தூக்கி
ஒல்வ தறிவது அறிந்ததன் - கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்
பொருள்:
- நம்மால் செய்ய முடியும் செயலையும், அதற்காக அறிய வேண்டியதை அறிந்தும்,
- -அச்செயல் மீது மனதை ஊன்றி செயல்பட்டால் முடியாத செயல் ஏதுமில்லை.
அருஞ்சொற்பொருள்
- ஒல்வது - தம்மால் இயன்றது.
Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது