தினம் இரு திருக்குறள்-25(வலியறிதல்)

 

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்

அதிகாரம்: வலியறிதல்
( பகை வெல்லுதலில் வலிமையை அறிந்து கொள்ளுதல்)
குறள்: 3

 உடைத்தம் வலியார் ஊக்கத்தின் ஊக்கி
 இடைக்கண் முரிந்தார் பலர்.

பொருள்:
  •  தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் மன எழுச்சியால் செயலை தொடங்கி,
  •  முடிக்க இயலாமல் இடையிலேயே கெட்டுப் போனவர்கள் பலர் ..
அருஞ்சொற்பொருள்
  • உடைத்தம்- தம்முடைய 
  • முரிந்தார் -அழிந்தவர் (தோற்றவர்)
குறள்: 4
  அமைந்தாங் கொழுகான் அளவறியான்                                                                     -தன்னை 
வியந்தான் விரைந்து கெடும்.
பொருள்:
  •    மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல்,
  • - தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
அருஞ்சொற்பொருள்
  • . தன்னை வியந்தான்- தன்னைத்தானே உயர்வாக எண்ணுபவன்.

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE