செய்தி துளிகள்-78
மாஸ்கோவில் நடைபெற்று வரும் ஜூனியர் வுசூ போட்டியில் இந்திய வீராங்கனை சாடியா தாரிக் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஸ்ரீநகரைச் சேர்ந்த 15 வயதான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர்.
ஜூனியர் வுசூ சாம்பியன்ஷிப் போட்டிகள் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சார்பாக 38 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் 2 முறை தேசிய அளவில் வுசூ சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்ரீநகரை சேர்ந்த சாதியா தாரிக் கலந்து கொண்டார்.
நேற்று நடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இவர் தங்க பதக்கத்தை தட்டிச்சென்றார்.
Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது