தினம் இரு திருக்குறள்-45(கூடாநட்பு)

 

பால்: பொருட்பால்

இயல்: அங்கவியல்

அதிகாரம்:83. கூடாநட்பு

குறள்:3

  பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்

 ஆகுதல் மாணார்க்கு அரிது

பொருள்:
  •  அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும் பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.
அருஞ்சொற்பொருள்
  • மாணார் - சிறப்பில்லாத பகைவர் 
  • கடைத்தும் - கற்றறிந்தும்

குறள்: 4

  முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

 வஞ்சரை அஞ்சப் படும்


பொருள்:
  •  முகத்தில் இனியவர் போல சிரித்து மனத்தில் தீமை நினைக்கும் வஞ்சகரின் நட்பை ஒதுங்கிவிட வேண்டும்.

அருஞ்சொற்பொருள்
  • நகை - புன்னகை
  • இனிய - இனிமையாக

          



Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE