தினம் இரு திருக்குறள்-46(கூடா நட்பு)
பால்: பொருட்பால்
இயல்: அங்கவியல்
அதிகாரம்:83. கூடாநட்பு
குறள்:5
மனத்தின் அமையா தவரை -எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் றன்று
பொருள்:
- மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்த ஒரு முடிவும் எடுக்க கூடாது.
அருஞ்சொற்பொருள்
குறள்: 6
- தேறல் - தெளிதல்
நட்டார்போல் நல்லவை சொல்லினும். - ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்
பொருள்:
- பகைவர், நண்பர் போல நல்ல வார்த்தைகளை சொன்னாலும்,
- அந்த சொற்களின் தீமை விரைவில் வெளிப்பட்டே தீரும்.
அருஞ்சொற்பொருள்
- நட்டார்- நண்பர்
- ஒட்டார் - பகைவர்
- ஒல்லை - விரைவில்
Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது