தினம் இரு திருக்குறள்-47(கூடா நட்பு)

 

பால்: பொருட்பால்

இயல்: அங்கவியல்

அதிகாரம்:83. கூடாநட்பு

குறள்:7

 சொல்வணக்கம் ஒன்னார்கண்                                             -கொள்ளற்க வில்வணக்கம் 

தீங்கு குறித்தமை யான்

பொருள்:
  •  வில்லின் வளைவானது தீமை செய்வதையே குறிக்கும்
  • அதுபோல பகைவர் வணங்கி பேசுவதும் தீயவையே குறிக்கும் என்பதால் ஏற்றுக் கொள்ள வேண்டாம்.
அருஞ்சொற்பொருள்
  • ஒன்னார் -பகைவர்
  • கொள்ளற்க- ஏற்க வேண்டாம்
குறள்: 8
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்                                                                      -ஒன்னார் 

அழுதகண் ணீரும் அனைத்து

பொருள்:
  •  பகைவர் தொழுவதற்காக குவித்த கைகளுக்கும் கொலைக்கருவி மறைந்திருக்கும்.
  • பகைவரின் அழுத கண்ணீரும் அத்தன்மை உடையதே.

அருஞ்சொற்பொருள்
  • படையொடுங்கும்- கொலைக்கருவி மறைந்திருக்கும்

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE