தினம் இரு திருக்குறள்-48(கூடா நட்பு)
பால்: பொருட்பால்
இயல்: அங்கவியல்
அதிகாரம்:83. கூடாநட்பு
குறள்:9
மிகச்செய்து தம்மெள்ளு வாரை - நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
பொருள்:
- புறத்தே மிகுதியாக நட்புக்காட்டி அகத்தே இகழும் பகைவரை,
- நாமும் புறத்தே மகிழ்வித்து மனத்திலே அவர் நட்பை ஒழித்தல் வேண்டும்.
அருஞ்சொற்பொருள்
குறள்: 10
- எள்ளுதல் - இகழ்தல்
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஓரிஇ விடல்
பொருள்:
- பகைவர் நண்பர் ஆகும் காலம் வரும்போது,
- மனத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்பு பாராட்டி பின்னர் அந்நட்பையும் விட்டுவிட வேண்டும்.
அருஞ்சொற்பொருள்
- விடல் - விட்டு விடுதல்
Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது