CURRENT AFFAIRS-5
வெள்ளை மாளிகையின் கொரோனா பணிகள் ஒருங்கிணைப்பளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ஆஷிஷ் ஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அரோமிகா என்ற நிறுவனம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பெயரில் தேயிலையை அறிமுகம் செய்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில், மிகப்பெரிய சோலார் மரத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்கான கவுன்சில் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் சேர்ந்து, லூதியானா பகுதியில், மரத்தின் வடிவில், சோலார் பேனல்களை உருவாக்கியுள்ளனர்.
கொல்கத்தாவின் தேசிய நூலகத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கான அருங்காட்சியகம்-உள்ளடக்க ஆய்வுக்குழு உறுப்பினராக பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்
மேற்கு வங்க மாநிலத்தில் மத்திய அரசின் கீழ் தேசிய நூலகம் அமைந்துள்ளது. இதில் நாட்டில் முதன்முதலாக மத்திய அரசின் மதிப்புமிக்க திட்டமாக 'மொழிகளுக்கான அருங்காட்சியகம் (Museum of Word)’ அமைக்கப்பட உள்ளது.
2021 ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி போர்டோ ரிகோவில் நடந்து முடிந்துள்ளது. இதில் போலாந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பிலாவ்ஸ்கா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அஹிம்சா விஸ்வ பாரதி அமைப்பானது ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் இந்தியாவின் முதல் உலக அமைதி மையத்தை நிறுவவுள்ளது.
தனது பயிர் பல்வகைப்படுத்தல் முறைகளை குறியீட்டு வடிவில் பதிவு செய்துள்ள முதல் இந்திய மாநிலமாக தெலுங்கானா மாறியுள்ளது.
இந்தியத் தேசிய எழுத்துக் கழகமான சாகித்திய அகாடமி, இந்தியக் கவிஞர் மற்றும் ஒரு ராஜதந்திர அதிகாரியான அபய் K எழுதிய ‘Monsoon’ என்ற புத்தக அளவிலானக் கவிதையை வெளியிட்டுள்ளது.
பருவக் காற்று (Monsoon) என்பது 4 வரிகள் உடைய மற்றும் 150 சரணங்கள் கொண்ட ஒரு கவிதையாகும்.
ஐ.நா., ஆதரவுடன் வெளியாகும் உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் அட்டவணையில் 2021-ஆம் ஆண்டிலும் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா 3 இடங்கள் முன்னேறி 136-வது இடத்தில் உள்ளது.
ஐரோப்பா மற்றும் ஆசியாவை இணைக்கும் வகையில் துருக்கியில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான தொங்கு பாலம் திறக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்தியாவுக்கான புதிய நேபாள தூதராக ஷங்கர் பிரசாத் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது