தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகம்.


 சென்னை-தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக, அகஸ்தியமலை அறிவிக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் கன்னியாகுமரி வன உயிரின காப்பகப் பகுதிகளை உள்ளடக்கிய அகஸ்திய மலை, யானைகளின் புகலிடமாக உள்ளது.


இது, தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகம்.இதில், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், ஆழ்வார்குறிச்சி, சிங்கம்பட்டி, மன்போதை, கொழுந்துமாமலை, திருக்குறுங்குடி, களக்காடு, வனமுட்டி, மகேந்திரகிரி, நடுகாணி, வள்ளியூர் வனப்பகுதிகள் அடங்கும்.அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம், விளவன்கோடு, திருவெட்டாறு, தோவாளை வனப் பகுதிகளும் அடங்கும்.

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE