ஆஷா பரேக்கிற்கு 2020ஆம் ஆண்டுற்கான தாதாசாகேப் பால்கே விருது,

 

ஆஷா பரேக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது, 2020

68வது தேசிய திரைப்பட விருதுகள் செப்டம்பர் 30ஆம் தேதி

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள் விருது வழங்கும் விழாவிற்குத் தலைமை தாங்கவுள்ளனர்.




2020 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது பழம்பெரும் நடிகை திருமதி ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. புதுதில்லியில் நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படும்.

இந்த முடிவை அறிவித்த மத்திய அமைச்சர் ஸ்ரீ அனுராக் தாக்கூர், “இந்திய சினிமாவுக்கு வாழ்நாள் முழுவதும் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக, திருமதி ஆஷா பரேக் ஜியை அங்கீகரித்து விருது வழங்க தாதாசாகேப் பால்கே தேர்வு நடுவர் குழு முடிவு செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமை அடைகிறேன்” என்றார். 68 வது தேசிய திரைப்பட விருதுகள் செப்டம்பர் 30, 2022 அன்று நடைபெறும் என்றும், இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தலைமையில் நடைபெறும் என்றும் அமைச்சர் அறிவித்தார் .

திருமதி ஆஷா பரேக் ஒரு புகழ்பெற்ற திரைப்பட நடிகை, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மற்றும் ஒரு சிறந்த இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். குழந்தை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தில் தேகே தேக்கோவில் முன்னணி கதாநாயகியாக அறிமுகமானார் மற்றும் 95 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடி படாங், தீஸ்ரி மன்சில், லவ் இன் டோக்கியோ, ஆயா சாவான் ஜூம் கே, ஆன் மிலோ சஜ்னா, மேரா காவ்ன் மேரா தேஷ் போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார்.

திருமதி பரேக் 1992 இல் பத்மஸ்ரீ விருதை வென்றவர். அவர் 1998-2001 வரை திரைப்பட சான்றிதழுக்கான மத்திய வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
திருமதி பரேக்கிற்கு விருதை வழங்குவதற்கான முடிவு ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழுவால் எடுக்கப்பட்டது என்றும் ஸ்ரீ அனுராக் தாக்கூர் அறிவித்தார். 52 வது தாதாசாஹேப் பால்கே விருதைத் தேர்ந்தெடுப்பதற்கான நடுவர் குழுவில் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் இருந்தனர்:

  1. திருமதி ஆஷா போஸ்லே
  2. திருமதி ஹேமா மாலினி
  3. செல்வி பூனம் தில்லான்
  4. ஸ்ரீ டி.எஸ்.நாகாபரணா
  5. ஸ்ரீ உதித் நாராயண்

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE