இந்தியாவிலேயே முதல் கடல்பசு பாதுகாப்பகம் தமிழக கடற்கரைப் பகுதியில் பாக் விரிகுடாவில் 448 சதுர கிலோமீட்டரில் அமைய உள்ளது.

 


தமிழக கடலோரப் பகுதிகளில் அழிந்து வரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்போசி இனத்தையும் அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மன்னார் வளைகுடா ,பாக் விரிகுடா பகுதியில் கடற் பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் 448 சதுர கிலோமீட்டர் பரப்பில் தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக் விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அறிவித்து தமிழக அரசு அறிவிக்கை செய்துள்ளது

கடற் பசுவின் சிறப்பு

  • உலகின் மிகப்பெரிய தாவர வகை கடல் பாலூட்டிகளான கடற் பசுக்கள் கடல் பொருட்களை உண்டு வளர்ந்து வருகின்றன.
  •  கடற்பசு இனங்களை பாதுகாப்பதனால் கடல் பகுதிகளுக்கு அடியில் உள்ள கடல் பொருட்களை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் வளிமண்டல கார்பனை அதிக அளவில் நிலைப்படுத்தவும் உதவி செய்கிறது. 
  • கடல் புள் படுக்கைகள் வணிகரீதியாக மதிப்புமிக்க பல மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு இனப்பெருக்கம் செய்ய ஏதுவாகவும் உணவளிக்கும் இடமாகவும் உள்ளது.
  • பாக் விரிகுடாவை ஒட்டிய கரையோர மக்கள் கடற்பசுக்களை பாதுகாப்பதன் அவசியத்தை புரிந்து கொண்டு பலமுறை மீன்பிடி வலையில் சிக்கிய கடற் பசுக்களை மீனவர்கள் வெற்றிகரமாக கடலில் விட்டுள்ளனர.
  •  இதைப் பாராட்டி தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் மாவட்டங்களில் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
  • கடற்பசுக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகின்றன. இப்போது சுமார் 240 கடற்பசுக்கள் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  •  அவற்றில் பெரும்பான்மையான கடற்பசுக்கள் தமிழ்நாட்டின் கடற்கரையில் காணப்படுகின்றன. எனவே கடற்பசுக்கள் அவற்றின் வாழ்விடத்தை அழிவிலிருந்து பாதுகாக்க உடனடித் தேவை ஏற்பட்டுள்ளது. 
  • இந்த நோக்கங்களை நிறைவேற்ற பாக் விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைத்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் இல்லை

  • தமிழக அரசின் அறிக்கை மூலமாக எந்த ஒரு புதிய கட்டுப்பாடுகள் நிபந்தனைகள் விதிக்கப்பட போவதில்லை. 
  • கடற்பசு பாதுகாப்பகம் என்பது இந்தியாவிலேயே முதன்முதலாக அமைக்கப்படும் பாதுகாப்பாகும்.
  •  இதனால் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள வன உயிரின பாதுகாவலர்கள் அனைவரின் பெருமை கொள்வார் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE