தட்டச்சுத் தேர்வுக்கு தடை- தினமணி நாளிதழில் வெளியான செய்தி
தமிழகத்தில் பழைய நடைமுறைப்படி தட்டச்சு தேர்வுகள் நடத்த அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த தேர்வுகள் தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்வுகளில் ஒத்தி வைக்கவும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் தட்டச்சு தீர்வுகள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்டு வருகின்றன இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வுகள் தாள் 1 தாள் 2 என இருநிலையில் நடைபெறும் தாள் ஒன்று தட்டச்சு செய்யும் வேகத்தை சோதனை செய்யும் தீர்வாகவும் தாள் இரண்டு அறிக்கை மற்றும் கடிதம் தட்டச்சு செய்யும் தேர்வாகவும் நடத்தப்படும், நீண்ட காலமாக இதே நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த தேர்வு முறையில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மாற்றத்தை கொண்டு வந்தது. இதன்படி இளநிலை முதுநிலை தட்டச்சு தேர்வுகளில் தாள் ஒன்று அறிக்கை மற்றும் கடிதம் தட்டச்சு செய்யும் தேர்வாகவும் , தாள் இரண்டு வேகத்தை சோதனை செய்யும் தேர்வாகும் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பழைய முறையிலேயே தேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த தனி நீதிபதி புதிய தேர்வு முறையை ரத்து செய்து பழைய நடைமுறையிலேயே தேர்வு நடத்த உத்தரவிட்டார் இதனை எதிர்த்து திருச்சியை சேர்ந்த தட்டச்சு பயிற்சி மைய உரிமையாளர் எஸ். பிரவீன் குமார் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார் அதில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கக அறிவிப்பின்படி புதிய நடைமுறைகள் தட்டச்சு தேர்வு எழுத மாணவர்கள் தயாராகி வருகின்றனர் இந்நிலையில் திடீரென தேர்வு முறையை மாற்றுவது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதோடு இந்த நடைமுறை மாற்றமானது கருத்து கேட்பதற்கு பிறகு அமல்படுத்தப்பட்டுள்ளது இதை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் ஆகவே அந்த உத்தரவுக்கு தடைவிதித்து அதை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் குறிப்பிட்டிருந்தார் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர் மகாதேவன் ஜெ சத்யநாராயண பிரசாத் அமர்வு தனி நீதிபதிகளின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது மேலும் மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகத்தில் தட்டச்சு தேர்வுகளை நடத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது