துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் புதுதில்லியில் நடந்த நிகழ்ச்சியில் "பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் - ஜீவன் தர்ஷன் அவுர் சம்சாமிக்தா" என்ற புத்தகத்தை வெளியிட்டார்.


 துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்  புதுதில்லியில் நடந்த நிகழ்ச்சியில் "பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் - ஜீவன் தர்ஷன் அவுர் சம்சாமிக்தா" என்ற புத்தகத்தை வெளியிட்டார்.  சமகாலத்தில் பண்டிட் தீன்தயாள் அவர்களின் சிந்தனைகளின் பொருத்தத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

 

  பண்டிட் தீன்தயாளை மேற்கோள் காட்டிய ஸ்ரீ தன்கர், கல்வி என்பது ஒரு படித்த மனிதன் சமுதாயத்திற்குச் சிறப்பாகச் சேவை செய்வான் என்ற பொருளில் ஒரு முதலீடாகும் என்றும், இந்த யோசனையே புதிய கல்விக் கொள்கை - 2020க்கு அடிப்படையாக அமைந்தது என்றும் கோடிட்டுக் காட்டினார்.


 இந்தியா தனது கடந்த காலப் பெருமையை அடைய வேண்டுமானால், பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் பரிந்துரைத்தபடி, எல்லா வகையிலும் மனித வளர்ச்சியின் முழுமையான பார்வையை இந்தியா எடுக்க வேண்டும் என்றார்.


  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் முரளி மனோகர் ஜோஷி மற்றும் முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE