மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் (CTET) அறிவிப்பு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் (CTET) 16வது பதிப்பு இந்த ஆண்டு டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி வரை ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
தேர்வர்களின் நுழைவுச் சீட்டில் சரியான தேர்வு தேதி குறிப்பிடப்படும்.
சிபிஎஸ்இ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆன்லைன் விண்ணப்பச் செயல்முறை இம்மாதம் 31ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், ஆன்லைன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 24ஆம் தேதி எனவும் தெரிவித்துள்ளது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது