டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு.

 



சென்னை: குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்கள் அறிவித்த நிலையில் தற்போது 9,870 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.


7301 காலிப்பணியிடங்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜீலை 24ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. 


குரூப் 4 தேர்வைத் தமிழ்நாடு முழுவதும் 18.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.


இந்நிலையில், குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்கள் அறிவித்த நிலையில் தற்போது 9,870 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.


 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி குறித்து ஜனவரி மாதத்தில் வெளியாக உள்ளன.


தேர்வர்கள் மகிழ்ச்சி:


பணியிடங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதிகப்படியான தேர்வர்களுக்கு அரசுப் பணிக்கான வாய்ப்பு கிடைக்கப் பெறும்.


இதனால் கடந்த ஜீலை 24ம் தேதி தேர்வு எழுதிய தேர்வர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE