#Group2Mains_2023 01) பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் 02) பேராசிரியர் அன்பழகன் சிறந்த பள்ளி விருது 03) பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
01) பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டி.பி.ஐ. வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.. அத்துடன் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவையும் திறந்து வைத்து டிபிஐ வளாகத்துக்கு ✅ பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் ✅ என முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டியுள்ளார்.
02) கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த அரசு பள்ளிகளுக்குப் பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது வழங்கப்படுகிறது.
03) அனைத்து அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் பழங்குடி நலப் பள்ளிகள், சீர்மரபினர் பள்ளிகள் ஆகியவற்றை மேம்படுத்த ✅ பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் ✅ அமல்படுத்தப்படுகிறது. அரசு தொடக்கப் பள்ளிகள் உட்பட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் அறையுடன்கூட வளர்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் இத்திட்டத்தின் கீழ் 18,000 வகுப்பறைகள் கட்டப்பட்ட உள்ளது. இதற்கென அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரூ. 7000 கோடி ஒதுக்கப்படுகிறது.
.

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது