சூரிய மின்சக்தி கிராமம்



  •  ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுந்தர் கார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான சகசாகி தனது மின்சார தேவைக்கு முழுவதுமாக சூரிய மின்சக்தியை பயன்படுத்தும் கிராமமாக மாறி உள்ளது
  • சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சார பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் கிராமம் முழுவதும் 24 மணி நேரமும் சூரிய மின்சக்தியை பயன்படுத்த இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது
  • தனியார் நிறுவனம் ஒன்றின் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது
  • கிராமத்தில் உள்ள 90 வீடுகளுக்கு சூரிய மின்சக்தி அடிப்படையில் மின்விளக்கு அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
  • சூரிய மின்சக்தி பயன்படுத்தி 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மூலம் நீர் வசதிக்கான அமைப்புகள் கிராமத்தின் 12 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன
  • 70 சூரிய மின்சக்தி தெரு விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன
  • சூரிய சக்தியில் இயங்கும் ஸ்மார்ட் வகுப்பறை இந்த முன்னெடுப்பில் கட்டப்பட்டு வருகிறது
  • நிலைத்த வளர்ச்சி இலக்குகளுக்கான வறுமை ஒழிப்பு கிராமத்தில் மாசு இல்லாத மின்சார பயன்பாட்டு மேம்படுத்துவது உள்ளிட்டவற்றில் மாநில அரசின் முயற்சிகளுக்கு ஆர்சிலர் மெட்டல் நிப்பான் ஸ்ரீ இந்தியா நிறுவனத்தின் உதவி முக்கிய பங்காற்றி உள்ளன

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE