ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் II ல் தகுதி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சான்றிதழ் (Certificate) 13.04.2023 இன்று முதல் மூன்று மாதம் வரை பதிவிறக்கம் செய்திடலாம்
ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06
பத்திரிக்கைச் செய்தி
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01/2022, நாள் 07.03.2022-ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II ற்கான கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) 03.02.2023 முதல் 15.02.2023 வரை இருவேளைகளில் நடத்தப்பட்டது. இத்தேர்வில் 254,224 தேர்வர்கள் கலந்து கொண்டனர். இத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் 28.03.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 15,430 தேர்வர்கள் இத்தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்.
23.07.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கைச் செய்தியின்படி, அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய 24.07.2022 முதல் 27.07.2022 வரை ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டது. எனவே, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள தற்போது அளிக்கும் கோரிக்கையின் மீது ஆசிரியர் தேர்வு தெரிவிக்கப்படுகிறது. வாரியம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது என
தற்போது, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் சமர்ப்பித்த விவரங்களின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் II ல் தகுதி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சான்றிதழ் (Certificate) 13.04.2023 இன்று முதல் மூன்று மாதம் வரை பதிவிறக்கம் செய்திடலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
நாள்:13.04.2023 தலைவர்
.jpg)
Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது