சென்னை உயர்நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதி - யார் இந்த எஸ்.வி.கங்காபூர்வாலா?




  •  மகாராஷ்ட்ராவில், கடந்த 1962ம் ஆண்டு, மே 24ம் தேதி பிறந்த கங்கா பூர்வாலா, எல்.எல்.பி. படிப்பிற்கான தகுதிப் பட்டியலில் மூன்றாமிடம் பிடித்தவர்.
  •  கடந்த 1985-ஆம் ஆண்டு ஜூனியராக பணியாற்ற தொடங்கிய அவர், விசாரணை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். 
  • கடந்த 1991 முதல் 2010 வரை சட்டக் கல்லூரியில் கௌரவ பகுதி நேர விரிவுரையாளராக இருந்துள்ளார்.
  •  2010ஆம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
  •  2022ம் ஆண்டு டிசம்பர் 11 முதல், மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார். 
  • தேசிய அளவில் புல்வெளி ஆடுகள டென்னிஸ் விளையாட்டில் ஈடுபாடுள்ள கங்கா பூர்வாலா, மாநில அளவில் கூடைப்பந்து போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
  •  இந்நிலை​யில், சென்னை உயர்நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலா பொறுப்பேற்றுள்ளார்.
  •  இவர், அடுத்த ஆண்டு மே மாதம் 23ம் தேதி ஓய்வு பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.



Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE