SI தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

 



நடப்பு நிகழ்வுகள்

  • 2022-ஆம் ஆண்டிற்கானநாட்டிலேயே எஸ்.ஐ., க்களுக்கான சிறந்த பயிற்சி மையமாகதமிழக காவல் துறையின் உயர் பயிற்சியகத்தை தேர்வு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் சுழற்கோப்பை வழங்கி உள்ளது. தமிழக காவல் துறையின் உயர் பயிற்சியகம் அமைந்துள்ள இடம் - வண்டலூர்சென்னை.
  • 2023 ஆண்டு தமிழகத்தில் ‘பெண் காவலர்களின் பொன் விழா ஆண்டு’ கொண்டாடப்படுகிறதுஇதன் ஒருபகுதியாக பெண் காவலர்கள் மட்டும் பங்கேற்கும் சென்னை துறைமுகம் முதல் கோடியக்கரை வரை 1000 கி.மீ தூரம் கொண்ட பாய்மரப் படகு பயணத்தை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • தமிழ்நாட்டின் இரண்டாவது திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர். – சிவன்யா (தமிழகத்தின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் - பிரித்திகா யாஷினி)
  • காவலர் - பொதுமக்கள் நல்லுறவு மேம்படவும்காவலர் நலன் காத்திடவும் முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் நான்காவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.(முதல் காவல் ஆணையம் ஆர்.ஏ.கோபால்சாமி தலைமையில் 1969 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது)
  • குடியரசு தினவிழாவையொட்டிமாநிலத்தில் உள்ள சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது வழங்கப்படுகிறது. இதில் சிறந் காவல் நிலையத்துக்கான முதல் பரிசு திருப்பூர் வடக்கு காவல் நிலையமும்இரண்டாம் பரிசு திருச்சி மலைக்கோட்டை காவல் நிலையமும்மூன்றாவது பரிசு திண்டுக்கல் வட்ட காவல் நிலையத்துக்கும் வழங்கப்பட்டது.
  • சென்னை பெருநகர காவல் துறையின் “காவல் கரங்கள்” திட்டம் “ஸ்காச் தங்க விருது”(Skoch Award-2022 - Gold)  வென்று சாதனை படைத்துள்ளது.(காவல் கரங்கள் திட்டம் - சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டும்உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்படும் திட்டம்)
  • கனடாவில் நடைபெற்ற உலக காவல்துறை தடகளப் போட்டியில் கலந்து கொண்ட தமிழகத்தின் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆயிரம் மீட்டர் வேகநடை பிரிவில் 3-வது முறையாக தங்கம் வென்றார்.
  • கனடாவின் வின்னிபெக் நகரில் சர்வதேச அளவில் காவல் துறைதீயணைப்புமீட்பு படையினருக்கான Police and Fire’ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் தமிழகத்தை சேர்ந்த தலைமை காவலர் லீலாஸ்ரீஅங்கு நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் ஓட்டம்,100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்நீளம் தாண்டுதல்உயரம் தாண்டுதல்குண்டு எறிதல்ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் கொண்ட 'ஹெப்டத்லான்' பிரிவில் கலந்து கொண்டு விளையாடி தங்கம் வென்றார். மேலும்400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும்உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

தமிழக காவல்துறையில் முக்கிய நியமனங்கள்

  • தமிழக காவல் துறையின் புதிய தலைவர் மற்றும்  சட்டம் - ஒழுங்கு DGP - சங்கர் ஜிவால்
  • சென்னை காவல் ஆணையர் -  சந்தீப் ராய் ரத்தோர்
  • தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் DGP -  அருண்

சென்னை பெருநகர காவல் துறையால் செயல்படுத்தப்படும்  திட்டங்கள்

  1. காவல் கரங்கள் - சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்டமற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கவும்உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யவும் செயல்படுத்தப்படும் திட்டம்
  2. சிற்பி - மாணவர்களை நல்வழி படுத்தவும்சட்டத்தை மதிக்கும் இளம் சமுதாயத்தை உருவாக்கவும்அரசு பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு திட்டம்
  3. ஆனந்தம் - பெண் காவலர்கள் தங்கள் பணியிலும் குடும்பத்திலும் சமநிலை படுத்தி வாழும் பயிற்சி திட்டம்
  4. மகிழ்ச்சி - தற்கொலை எண்ணங்கள் மற்றும் குடிபோதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்காக உளவியல் மறுவாழ்வு திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம்-2023

  • போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்தல்சட்டவிரோத செயல்பாடுகளை ஒடுக்குதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கப்பட்டது.
  1. அஸ்ரா கார்க்ஐபிஎஸ், சென்னை மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு(வடக்கு) கூடுதல் ஆணையர்.
  2. வி. பத்ரிநாராயணன் ஐபிஎஸ்கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
  3. டோங்கரே பிரவின் உமேஷ்ஐபிஎஸ்தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
  4. எம். குணசேகரன்சேலம் ரயில்வே மண்டலத்தின் காவல் துணை கண்காணிப்பாளர்.
  5. எஸ். முருகன்நாமக்கல் மாவட்ட காவல் துணை ஆய்வாளர்.
  6. ஆர். குமார், நாமக்கல் மாவட்ட கிரேடு பிசி 1380.

சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம்-2023

  • க. வெங்கடராமன்-  கூடுதல் காவல் துறை இயக்குநர்குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைசென்னை.
  • அஸ்ரா கர்க்-  காவல்துறை தலைவர்/ கூடுதல் காவல் ஆணையாளர்சட்டம் மற்றும் ஒழுங்கு (வடக்கு)சென்னை பெருநகர காவல்.
  • சு. ராஜேந்திரன்-  காவல்துறை துணைத் தலைவர்குற்றப்புலனாய்வுத் துறை நுண்ணறிவுசென்னை.
  • ப.ஹீ. ஷாஜிதா - காவல் கூடுதல் துணை ஆணையாளர்இணையவழி குற்றப் பிரிவுசென்னை பெருநகர காவல்.
  • ஹா. கிருஷ்ணமூர்த்தி -காவல் துணைக் கண்காணிப்பாளர்தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைசென்னை.

தமிழக காவல் துறையில் பெண்கள் பற்றிய குறிப்புகள்

  • தமிழக காவல் துறையில் பெண்கள் முதன்முறையாக பணியமர்த்தப்பட்ட ஆண்டு - 1973
  • முதன் முதலாக காவல்துறையில் பெண் காவலர்களை சேர்ந்த போது ஒரு சப்-இன்ஸ்பெக்டர்ஒரு தலைமைக்காவலர், 20 காவலர்கள் அடங்கிய சிறிய படைதான் இருந்தது. அந்த பெண் போலீஸ் படைக்கு முதல் உதவி ஆய்வாளராக தலைமை தாங்கும் பொறுப்பை உஷாராணி பெற்றார்.
  • தமிழகத்தில் தற்போது 202 காவல் ஆய்வாளர்கள் உட்பட 23,542 பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
  • தமிழகத்தில் முதன்முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1992
  • தமிழகத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் எண்ணிக்கை – 228 (இந்தியாவில் அதிக மகளிர் காவல் நிலையங்ள் கொண்ட மாநிலம்)
  • தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி-  திலகவதி(1976)
  • தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி - லத்திகா சரண்(2010)
  • தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட ஆண்டு -1989

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE