நடப்பு நிகழ்வுகள் 2022- ஆம் ஆண்டிற்கான , நாட்டிலேயே எஸ்.ஐ. , க்களுக்கான சிறந்த பயிற்சி மையமாக , தமிழக காவல் துறையின் உயர் பயிற்சியகத்தை தேர்வு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் சுழற்கோப்பை வழங்கி உள்ளது. தமிழக காவல் துறையின் உயர் பயிற்சியகம் அமைந்துள்ள இடம் - வண்டலூர் , சென்னை . 2023 ஆண்டு தமிழகத்தில் ‘ பெண் காவலர்களின் பொன் விழா ஆண்டு ’ கொண்டாடப்படுகிறது . இதன் ஒருபகுதியாக பெண் காவலர்கள் மட்டும் பங்கேற்கும் சென்னை துறைமுகம் முதல் கோடியக்கரை வரை 1000 கி.மீ தூரம் கொண்ட பாய்மரப் படகு பயணத்தை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் இரண்டாவது திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர். – சிவன்யா (தமிழகத்தின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் - பிரித்திகா யாஷினி ) காவலர் - பொதுமக்கள் நல்லுறவு மேம்படவும் , காவலர் நலன் காத்திடவும் முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் நான்காவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.(முதல் காவல் ஆணையம் ஆர்.ஏ.கோபால்சாமி தலை...