தினம் இரு திருக்குறள்-25(வலியறிதல்)
பால்: பொருட்பால் இயல்: அரசியல் அதிகாரம்: வலியறிதல் ( பகை வெல்லுதலில் வலிமையை அறிந்து கொள்ளுதல் ) குறள்: 3 உடைத்தம் வலியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். பொருள்: தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் மன எழுச்சியால் செயலை தொடங்கி, முடிக்க இயலாமல் இடையிலேயே கெட்டுப் போனவர்கள் பலர் .. அருஞ்சொற்பொருள் உடைத்தம்- தம்முடைய முரிந்தார் -அழிந்தவர் (தோற்றவர்) குறள்: 4 அமைந்தாங் கொழுகான் அளவறியான் -தன்னை வியந்தான் விரைந்து கெடும். பொருள்: மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், - தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான். அருஞ்சொற்பொருள் . தன்னை வியந்தான்- தன்னைத்தானே உயர்வாக எண்ணுபவன்.