தினம் இரு திருக்குறள்-10(பெரியாரைத் துணைக்கோடல்)
பால்: பொருட்பால் இயல்: அரசியல் அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்(45) (நன்னெறியில் செலுத்தும் பேரறிவு உடையோரை துணைக் கொள்ளுதல்) குறள்: 3 அரியவற்றுள் எல்லாம் அரிதே ,பெரியாரைப் பேணித் தமராக் கொளல் பொருள்: பெரியோரைப் போற்றி அவரை தமது உறவாக்கிக் கொள்ளுதல் அரியவற்றுள் எல்லாம் அரிய செயலாகும் அருஞ்சொற்பொருள்: பேணி-போற்றி தமர்-உறவினர் குறள்: 4 தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை பொருள்: தம்மைக் காட்டிலும் அறிவில் சிறந்த பெரியவரே தமது உறவாக ஏற்றுக்கொள்வது எல்லாவற்றையும் விட சிறந்த வலிமை ஆகும் அருஞ்சொற்பொருள்: வன்மை -வலிமை தலை -சிறப்பு ஒழுகுதல்- ஏற்று நடத்தல்