அளவில் சிறுத்து, ஊட்டத்தில் பெருத்து, உடலை உறுதியாக்குபவை சிறுதானியங்கள். அவற்றை வழி மொழியும் வகையில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, 🎄 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக 🎄 அறிவித்துள்ளது. தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இரண்டு 🔖 சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் 🔖 திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுதானிய ஊட்டச்சத்துக்கள் பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், விவசாயிகள், தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள், நுகர்வோர் பங்கேற்கும் 🎀 சிறுதானிய திருவிழா 🎀 மாநில, மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது. பயறுவகை உற்பத்தியில் தன்னிறைவை அடையும் பொருட்டு, துவரை உற்பத்தியை அதி...