வெள்ளை மாளிகையின் கொரோனா பணிகள் ஒருங்கிணைப்பளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ஆஷிஷ் ஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அரோமிகா என்ற நிறுவனம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பெயரில் தேயிலையை அறிமுகம் செய்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில், மிகப்பெரிய சோலார் மரத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்கான கவுன்சில் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் சேர்ந்து, லூதியானா பகுதியில், மரத்தின் வடிவில், சோலார் பேனல்களை உருவாக்கியுள்ளனர். கொல்கத்தாவின் தேசிய நூலகத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கான அருங்காட்சியகம்-உள்ளடக்க ஆய்வுக்குழு உறுப்பினராக பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் மத்திய அரசின் கீழ் தேசிய நூலகம் அமைந்துள்ளது. இதில் நாட்டில் முதன்முதலாக மத்திய அரசின் மதிப்புமிக்க திட்டமாக 'மொழிகளுக்கான அருங்காட்சியகம் (Museum of Word)’ அமைக்கப்பட உள்ளது. 2021 ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி போர்டோ ரிகோவில் நடந்து முடிந்துள்ளது. இதில் போலாந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பிலாவ்ஸ்கா உலக அழக...